japtavyam "guru-paramparaiyum" dvayamum

prayers are the recitation of the spiritual lineage (guru-parampara) and the Dvayam (mantra)

 

தனியன்ங்கள் & வாழித் திருநாமங்கள்

ஸ்ரீ உ.வே. கோ.க.இ. எம்பாவண்ணன் ராமானுஜாச்சார்யர் ஸ்வாமி

தனியன்

ஸ்ரீ கௌஶிகாந்வய ஸுதாப்தி ஸுதாமயூகம் ஸ்ரீமந் மஹார்ய குருவர்ய தநூஜ ரத்னம்
தஸ்மாதவாப்த நிகமாந்த யுகார்த்த போதம் ராமாநுஜார்ய குருமந்வஹ மாஶ்ரயாம: || 

வாழித்திருநாமம்

கார்த்திகை ரோகிணி நாள் அவதரித்தோன் வாழியே
காவிரி சூழ் அரங்கநகர் கண்டு உகந்தோன் வாழியே
மேற்றிசை மேற்கோட்டை மனம் மேவிடுவோன் வாழியே 
மேலான பூதூரன் மலர் பணிவோன் வாழியே 
சீராரும் தொட்டயாசார் தொழுதெழுவோன் வாழியே 
சீபாடியப் பொருளின் சீர்மைகண்டோன் வாழியே 
நாவீறன் வாய்மொழியின் நலநுகர்ந்தோன் வாழியே 
நல் எம்பாவண்ணர் தம் நற்கழல்கள் வாழியே 

முத்தமிழ் வேதம் வாழ முன்னோர்கள் சீர்வாழ
நித்தியமாய் சோதிடமும் நேர்வாழ பக்தியுடன் 
என்னரங்கன் என்றேத்தும் எம்பாவண்ணர் குரிசில் 
இன்னமொரு நூற்றாண்டிரும்

ஸ்ரீ உ.வே. கோ.க.இ. தொட்டையாச்சார்யர் ஸ்வாமி (பெரியஸ்வாமி)

தனியன்

ஸ்ரீமத் கௌஶிக துக்தாப்தி சந்த்ரம் குண கணோஜ்ஜ்வலம் |
ராமாநுஜார்ய ஸத்புத்ரம் மஹாசார்யம அஹம் பஜே || 

வாழித்திருநாமம்

தனுர் பூரட்டாதி தனில் தலத்துதித்தான் வாழியே
தந்தை எம்பாவண்ணர்தாள் தொழுதெழுவோன் வாழியே
இளையாழ்வார் தொண்டினையே ஏத்துமவன் வாழியே
இளையவில்லி திருக்குலத்தை ஈடு செய்தான் வாழியே
தக்கானைத் தினந்தோறும் தொழுதெழுவோன் வாழியே
பதின்மர்கலைப் பாசுரங்கள் பரிந்து கற்றான் வாழியே
தென்னரங்கன் திருவடியைச் சிந்தை செய்வோன் வாழியே
தொட்டாரியன் துணைப்பதங்கள் தொல்லுலகில் வாழியே

ஸ்ரீ உ.வே. கோ.க.இ. பாலதந்வி வரதாச்சார்யர் ஸ்வாமி (வர்த்தமான ஸ்வாமி)

தனியன்

ஸ்ரீமத் கௌஶிக வார்தீந்தும் ஸௌஶீல்யாதி குணாகரம் |
ஸ்ரீமத் கநார்ய ஸத்புத்ரம் வரதார்யம் அஹம் பஜே || 

வாழித்திருநாமம்

வாழி இளையவில்லி ஆச்சான்
மாதகவால் வாழும் பாலதந்வி வரதாசிரியன்
வாழியவன் ஶரணாகதி மொழிப்பொருளை
சிச்சனவன் உய்யும்படி உரைக்கும் சீர்
கௌஶிகர் தம் குலத்துதித்த குணக்கடலோன் வாழியே
தொல் புகழ் சீர் தொட்டையாரியன் தனயனவன் வாழியே
சித்திரையில் உரோகினி நாள் உதித்த செல்வன் வாழியே
திருவரங்கன் பெரிய கோயில் போற்றுமவன் வாழியே
திருக்கடிகைத் தக்கானைத் தினம் தொழுவோன் வாழியே
காரேய் கருணையிராமானுசன் கழல் பணிவோன் வாழியே
பதின்மர் தம் பாசுரத்தில் பற்றுடையோன் வாழியே
நம்பாலதந்வி வரதாரியன் பொற்பதங்கள் வாழியே

சீராரும் இளையவில்லி இணையடிகள் வாழியே
பன்னிருசீர் திருநாமம் அணிந்த எழில் வாழியே
பன்னிருவர் பாடல்கள் பயில் பவளம் வாழியே
திருமலைமால் திருக்கோஷ்டித் தழைக்க வந்தான் வாழியே
திருமுகமும் கருணைமிகுக் கண்ணினைகள் வாழியே
திருமுடியிற்திகழ்வழகுக்குழலொழுங்கும் வாழியே
தாள்பணிவோர் ஆருரைப் பேணுமவன் வாழியே
கௌஶிகர் தம் குலமகனார் வாழி என்றும் வாழியே

மாலடியார்வாழ மாநகரரங்கம் வாழ
பெரும்பூதூர் மாமுனி தன் மன்னுபுகழ் வாழ
ஆழிசூழ் அனைத்துலகும் தாம் வாழ
நன்னெறிசேர் ஆத்திகர் புகழ் இளையவில்லி வரதாரியனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்

Would you like to get sammasharayanam done?

Contact Sri Koil Kandhadai Elayavilli Swamy Disciples Association
Scroll to top